ஆரோக்கியசாமி

எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். 
அதை எனக்கு கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 9:27


"நவீன மக்களுக்கு மனப்பயிற்சி பெருகி உடற்பயிற்சி குறுகுவதால், 
அவர்களது மனது கூர்மையாகி உடல் ஊளைச் சதையாகிறது" 
என்கிறார் மருத்துவர் லில்லியன் ஸ்டான்லி. 
உண்மையிலே நாமும், வேலைப்பளு, மனநிலை 
இதையெல்லாம் காரணம்காட்டி, 
உடற்பயிற்சிக்கும் உடலுக்கும் முக்கியத்துவம் தர மறக்கிறோம்.

அன்றாட உடற்பயிற்சி நம்மை ஒழுக்கமாகவும், ஆரோக்கியமாகவும், 
சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். 
காலை கதிரொளியில் வியர்க்க விறுவிறுக்க ஓடி விளையாடுவதால் 
உடலும் உள்ளமும் நலமாகும்; இந்த அடித்தளம் 
ஆரோக்கிய வாழ்வை சாத்தியமாக்கும். 


சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED