கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும்,
உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு,
நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. . . . . .
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
ஆதியாகமம் 12:1,3
முக்கால் நூற்றாண்டாய் இளவரசனாக வாழ்ந்தவொரு மனிதனை
ஆண்டவர் அழைத்து, "உன் சாதி-சனம்-வீடு-நாடு அனைத்தையும் விட்டுவிட்டு
நான் காட்டும் தேசத்திற்கு போ! இறையாசீர் உனதாகும், உன்னாலாகும்"
என்றவுடன், உரியவைகளை உதறிவிட்டு உன்னதரின் வார்த்தைக்கு
உடனே கீழ்படிந்தார் ஆபிரகாம்.
எதுவுமே இல்லாவிடினும், வெறுமையிலும் வெள்ளாமை செய்யலாம்
என ஆபிரகாம் கீழ்ப்படிந்து புறப்பட்டதற்கு ஒரே காரணம்,
ஆண்டவர் மேலுள்ள விசுவாசம்.
அந்த விசுவாசமே அவரை விசுவாசத்தின் தந்தையாக உயர்த்தியது.
இத்தகு உடனடி கீழ்ப்படுதலுக்கேற்ற விசுவாசம்நம்மிலும் வளர
ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
இறைவிசுவாசம் நமக்கு நங்கூரமானாலே,
இறைசத்தத்திற்கு கீழ்படிதல் மும்முரமாகும்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete