அன்பு சகோதரமே !

ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் 
லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. . . 
ஆபிராம் லோத்தை நோக்கி: 
எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் 
வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர் என்றார்.
ஆதியாகமம் 13:7-8

ஆபிரகாமும், லோத்தும் கூடியிருந்த இடத்தில், 
கூட இருந்தவர்களுக்குள் வாய்த்தகராறு வார்தைபோரானது. 
உடனே, ஆபிரகாம் லோத்திடம், 
"நமக்கிடையே தகராறு வேண்டாம்; நாம் சகோதரர்" என்றார். 
இந்த 'சகோதர' உணர்வு தான், 
சண்டைக்கு சாவுமணி அடித்தது, சமரசத்தால் 'சமபூமி' தெரிந்தது.

இதுபோல, "ஆண்டவரால் படைக்கப்பட்ட நாமெல்லாம் 
ஒரு தொழுவத்து மாடுகள்/ஒரு தாயின் பிள்ளைகள்" என்ற சிந்தையை
 நமக்கு நாமே விதைத்துக்கொண்டே இருந்தால், விதைகள் விருட்சமாகி 
ஒருவரையொருவர் முட்டிக்கொல்லும் முரட்டுத்தனம் ஒழியும், 
சண்டைகள் சச்சரவுகள் நீங்கும், சமாதானம் சம்பூரணமாகும்.


'நாமெல்லாம் சகோதரர்' எனுமுணர்வு,
அழிவின் தீய எண்ணங்களை ஒழித்து, 
அன்பின் நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED