பொங்கலோ பொங்கல்.

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் 
அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, 
உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
II கொரிந்தியர் 9:10

கருணையே உருவான இறைவன், 
தான் படைத்த அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கிறார்!
பிறருக்கு உதவுவோருக்கு உதவுகிறார், 
நன்மை செய்வோருக்கு நன்மைகளை செய்கிறார். 
மனிதர் ஒவ்வொருவரின் விதைப்புக்கேற்ற விளைச்சலையும் 
அவரே அருளுகிறார்.

கதிரவன் தன் கரங்களை விரிக்கும் முன்னரே 
கருணையாம் கடவுள் உலகிற்கு உணவளிக்கிறார்; 
உழவுத்தொழில் செய்வோர் மூலமாய் நம்மிடம் சேர்க்கிறார். 
உழவரைப்போல, பிறர் நன்மைக்கான நமது உழைப்பு பெருகினால், 
இறை உள்ளம் உவகையில் மகிழும்; எங்கும் நன்மைகளே பொங்கும்.


நமது நற்செயல்கள், உழவரைப்போல உன்னதமாகவும், மஞ்சள்போல மங்களமாகவும், கரும்பைப்போல இனிப்பாகவும் இருக்கட்டும்.


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED