கடுமையான பரீட்சை

தேவன்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய
ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, 
மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் 
மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆதியாகமம் 22:2

அகவை நூறில் ஆபிரகாமுக்கு கிடைத்த அற்புத வாரிசு ஈசாக்கு.
'இந்த ஈசாக்க்கின் மூலமே ஆபிரகாமின் சந்ததி பெருகும்' என வாக்குரைத்த
 ஆண்டவர், திடீரென ஈசாக்கையே தகன பலியாக - தனக்கு பலியாக்க 
ஆபிரகாமுக்கு கட்டளையிடுகிறார், ஆபிரகாமும் கேள்வியின்றி கீழ்படிகிறார்.

'ஆண்டவரா? அருந்தவப்புதல்வனா?'
ஆபிரகாமுக்கு நடந்த கடுமையான பரீட்சை இது. இதில் ஆபிரகாம், 
ஆண்டவருக்கு அஞ்சி அடிபணிந்தார், ஈசாக்கும் தந்தைக்கு ஒத்துழைத்தார்
 இதனால், பரிட்சையில் ஈசாக்கு பலியாகவில்லை; 
மாறாக, ஆபிரகாமுக்கோ பதக்கமும், 
அள்ளிசுமக்க அநேக ஆசீர்களும் கிடைத்தது.

தேர்வுகளில் தேவனே முதன்மையாயிருந்தால் 
 பரீட்சை எல்லாவற்றிலும் பதக்கம் தான்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED