லேயாள்: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்.
ஆதியாகமம் 29:32
கட்டிய கணவனாலே அற்பமாக எண்ணப்பட்டு,
புறக்கணிக்கப்பட்ட லேயாளை கர்த்தர் கண்டு,
அவளுக்கு மகப்பேறு அருளி ஆசீர்வதித்ததால்,
தாழ்வாக நடத்தப்பட்டவள் தாயாக உயர்த்தப்பட்டாள்;
பரிதாபத்திற்குரியவள் பாக்கியவதியானாள்.
கணவனால் சிறுமைப்படுத்தப்பட்ட லேயாள், இறைவனால் சிலாக்கியம் பெற்றாள். இதுபோல, மனிதரால் சிறுமைப்படுத்தப்பட்டு
அற்பமாக எண்ணப்படுவோரெல்லாம், ஆண்டவரால் அற்புதமாக
உயர்த்தப்படுவர் என்பதே காரியத்தின் கடைத்தொகை.
சிறுமைப்படும்போதெல்லாம் சிலுவையையே நோக்கினால்,
சிகரம்தொடும் சிலாக்கியம் பெறுவோம்.

Amen🙏🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteBlessings Upon U
ReplyDelete