அவனும் அவரும்

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், 
அவன் காரியசித்தியுள்ளவனானான். . .
ஆதியாகமம் 39:2

யோசேப்பு அடிமை தான். 
ஆனாலும், தனது வேலைகளால் அரண்மனையையே அசத்துகிறான். 
புதிய இடம், அடிமைமனம், அக்கம்பக்கம், வேலை நெருக்கம், அதிகார 
ஒடுக்கம், . . . இப்படி எதுவும் எப்போதும் யோசேப்பை பாதிக்கவில்லை. 
ஏனென்றால், கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.

அசத்தலாக வேலை செய்ய ஆசைப்படும் நமக்கு காரணிகள் தடையாகிறதா? 
இதோ, அனுதினமும் ஆண்டவரோடு நடந்த யோசேப்பு 
நமக்கு உற்சாகமூட்டுகிறார்! கர்த்தர் யோசேப்போடு இருந்ததால், 
காரணிகள் எதுவும் அவரை கட்டுபடுத்திவிடவில்லை;
மாறாக, செய்யும் செயல்களிலெல்லாம் சிறந்து விளங்கினார்.


யோசேப்பு கர்த்தரோட நடந்தார், கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED