நோக்கமும் ஆக்கமும்

யோசேப்பு: நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; 
தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, 
வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, 
அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
ஆதியாகமம் 50:20

யோசேப்பின் உயிரைக்குடிக்க உடன்பிறப்புகள் துடிக்க, 
உன்னத தேவனோ உயரத்திலும் உயரமாய் யோசேப்பை உயர்த்தினார். 
அற்பப்பணத்துக்கு விற்கப்பட்பட்டாலும், 
ஆண்டவரால் அதிபதியாக்கப்பட்டார். 
அதிபதியானாலும், தன்னை விற்றுப்போட்டவர்களை பழிவாங்கவில்லை; 
மாறாக, பசியாற்றிப் பராமரித்தார்! 

யோசேப்பைக் குழிக்குள் தூக்கிப்போட்டார்கள், 
முடிவில் அவரே குடிகளுக்கெல்லாம் படிஅளக்கிறார்.
 சகோதரர்கள் தீமைதான் செய்தார்கள், 
சர்வவல்லமையுள்ளவரோ தீமையையும் நன்மையாக மாற்றினார். 
ஆகவே, உண்மை ஒன்றுதான்: 
"நோக்கம் நமதானாலும், ஆக்கம் ஆண்டவருடையதே"!

சர்வ வல்லவர் நம் சொந்தமானால்,
தீதும் நன்றாகும், பாலையும் பயிராகும்/சோலையாகும்.



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED