ரொம்ப கசக்குதா?

தேவனாகிய கர்த்தர்: 
"நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, 
பாலும் தேனும் ஓடுகிற . . . தேசத்துக்கு கொண்டுபோவேன்" என்றார்.
யாத்திராகமம் 3:17

எகிப்து நாட்டில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு, 
ஒடுக்கப்பட்டார்கள்; எனினும் பலுகிப்பெருகினார்கள்! 
ஓயாது ஒடுக்கப்பட்டதால் 
வாழ்நாளும் வருத்தமானது, கூக்குரலும் அதிகமானது. 
விடுதலை வேண்டியோரின் பெருமூச்சு தேவ சமூகத்தில் எட்டியது.

"உங்கள் அடிமையும் சிறுமையும் நீங்கும், 
பாலாறும் தேனாறும் சொந்தமாகும்" - வாழ்வையே வெறுத்த மக்களுக்கு 
வாக்கு கொடுத்த ஆண்டவர், சொன்னதையே சொந்தமாகவும் கொடுத்தார்! 
அவரே, நமது வாழ்வின் விடுதலை வேண்டும் மனுக்களுக்கும், 
விடையறியா வினாக்களுக்கும் தீர்வாகிட மன்றாடுவோம்.


சிறை(சிறுமை)பட்டவர்களையும் சீர்படுத்தி சிறப்பாக்குபவர் 
ஆண்டவர் ஒருவரே!!

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED