என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே,
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும்,
உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
சங்கீதம் 19:14
அனுதினமும் திருமறையை வாசிப்பதும், தியானிப்பதும், ஜெபிப்பதும்
நமது விருப்ப உணவாக இருக்கவேண்டும்.
ஏனென்றால், நமது இதயமும் மனமும்
இறைவார்த்தையாலும், இறைபக்தியாலும் நிறைந்திருந்தால்
நம்மிடமிருந்து வெளிப்படுவதும் அப்படியே இருக்கும்.
நமது அகம் முழுக்க திருவார்த்தைகள் குடியிருந்தால், நமது நினைவுகளும்,
பேசும் வார்த்தைகளும், இறைவன் விரும்பும்படியே இருக்க்கும்.
ஆண்டவரின் விருப்பபடியே எப்பொழுதும் நாம் நடந்திட
விரும்புவோம் - முயற்சிப்போம்- பயிற்சி செய்வோம்.
ஆண்டவர் தாமே நமக்கு உதவுவார், அனுதினமும் நம்மில் பிரியப்படுவார்.
P.C.: Google Images

Blessings Upon U Ramya
ReplyDeleteAmen.....
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete