நொண்டிச்சாக்கு

மோசே கர்த்தரை நோக்கி: 
ஆண்டவரே, . . நான் வாக்குவல்லவன் அல்ல; 
நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். . . 
அப்பொழுது கர்த்தர்:
 நான் உன் வாயோடே இருந்து, 
நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
யாத்திராகமம் 4:10,12

அடிமை மக்களை மீட்டு வழிநடத்த, 
மோசேயை ஆண்டவர் தெரிந்துகொண்டார். மோசேயோ, தப்பிக்க வழிதேடி
 சரளமாக பேசவராது என சாக்குப்போக்கு சொல்லுகிறார். 
ஆண்டவரின் அடையாளங்களைக் கண்டும், அரசனை எதிர்த்து, 
அடிமைகளை மீட்டு வழிநடத்த மனம் மறுக்கிறது, நழுவிடவே நினைக்கிறது.

சொற்பொழிவாற்ற ஆண்டவர் ஆள்தேடவில்லை, செயல்படவே மோசேயை தெரிந்துகொண்டார். செயல்வீரர்களுக்கு பேச்சுக்குறை பெரிதில்ல. 
ஆனாலும், அதிகாரத்தை எதிர்த்து குரல்கொடுக்க 
அழைத்தவர் உண்மையுள்ளவர். 
ஆதலால், அருள்கொடுத்தார்-அள்ளிக்கொடுத்தார்! 


ஆண்டவரிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு அடிபணிந்து வழிநடந்தால், 
நம்மை படைத்தவர் நமது பலவீனங்களை பார்த்துக்கொள்வார். 


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED