நீங்காத நிழலாக

இஸ்ரவேல் மக்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, 
கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், 
இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் 
அவர்களுக்கு முன் சென்றார்.
யாத்திராகமம் 13:21

பாதயாத்திரை தான்; 
ஆனாலும், இஸ்ரவேல் மக்களுக்கு பாரமாயிருக்கவில்லை.
ஏனென்றால், பாடுபட்ட வாழ்விலிருந்து பரம விடுதலை! 
வழிக்குத் தேவையான எல்லா பொருளும் கிடைத்தது; 
வனாந்திரம் முழுக்க இறைவனின் வழிநடத்துதலும் இருந்தது.

வனாந்திர பயணத்தில் 
வெயிலுக்கு நிழலாகவும், இருட்டுக்கு வெளிச்சமாகவும் இருந்து 
அந்த மக்களை ஆண்டவர் வழிநடத்தினார்! 
இப்படி, தேவையான நேரத்தில் தேவைகளை தீர்த்திட்ட தேவன் தாமே, 
நமது வாழ்வின் வனாந்திரமோ-வயல்வெளியோ, 
எதிலும் நம்மை தொடர்ந்து வழிநடத்திட மன்றாடுவோம்!!


வாழ்வளிக்கும் தேவனே நமது வழித்துணையாகி வழிநடத்தினால்,
வாழ்வு முழுக்க வளமாகும்!!!


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED