வேடிக்கையும் வெற்றியும்

மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்;
 . . .கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; 
நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
யாத்திராகமம் 14:13-14

"அழிக்க நினைத்த அடிமைகளை விட்டுவிட்டோமே" என்றென்னி 
கொன்றுகுவிக்க கொலைவெறியோடு தொடர்ந்தனர் எகிப்து மக்கள்! 
தப்பித்து வந்தாலும், மரணபயத்தில் ஓலமிட்டு ஒப்பாரி வைத்த 
இஸ்ரவேலரைப் பார்த்து மோசே: "பயப்படாதிருங்கள், 
கர்த்தர் யுத்தம் செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என்றார்.

நாம் விடுதலையான அடிமைத்தனமும் நம்மை எளிதில் விட்டுவிடாமல், 
பற்றிப்பிடிக்க பாய்ந்துவரும். ஆனாலும், பயம் வேண்டாம்! இந்த யுத்தம் 
நமக்கானாலும், நம்மை விடுவித்த ஆண்டவர் விட்டுவிடமாட்டார், 
நமக்காக யுத்தம் செய்வார் - வரலாறு காணாத வெற்றியை
நமக்கே தேடித்தருவார். 


யுத்தத்தை கர்த்தர் கரத்தில் முழுவதுமாக விட்டுவிடுவோம் -
 வேடிக்கைப்பார்ப்போம் - வெற்றிபெறுவோம்!


P.C.: Google Images


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED