மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்;
அப்பொழுது கர்த்தர் . . அதை வறண்டுபோகப்பண்ணினார்;
ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர்
சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்.
யாத்திராகமம் 14:21-22
சாகடிக்கத்துடிக்கும் கும்பலிடம் தப்பிக்க நினைக்கும்
இஸ்ரவேல் மக்களுக்குத் தண்ணீர் தடையாக நிற்கிறது;
மரணபயத்தில் சமுத்திரம் சவக்குழியாகத் தெரிகிறது.
ஆனால், சர்வ வல்ல தேவனோ, தமது மக்களுக்காக
சடிதியில் சமுத்திரத்தின் தண்ணீரையேப் பிரித்து,
தரையை வறட்சியாக்கி வழிநடத்தி காப்பாற்றினார்.
'கடற்கரையிலே கதியற்று நின்றோர்
கடலையே கடந்துவிட்டனர்- காப்பாற்றப்பட்டனர்'.
இதுபோன்ற கடற்கரை சூழலோ, கடல்கடக்கும் தேவையோ எதுவாயினும்,
நமது கால்களை ஆழிக்குள்ளும், சகதிக்குள்ளும் சிக்கிடாமல்,
நம்மைக் காத்து வழிநடத்த கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.
வழியே இல்லாத இடத்திலும் வழியை உருவாக்கி,
வழிநடத்தி வாழ்வளிக்கும் கர்த்தரையே நோக்கிப்பார்ப்போம்.

Amen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete