என்ன காரணம் ?

இஸ்ரவேல் ஜனங்கள் மூன்று நாள் வனாந்தரத்தில் 
தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, 
மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க
அவர்களுக்குக் கூடாதிருந்தது; . . 
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: 
என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
யாத்திராகமம் 15:22-24

இஸ்ரவேல் மக்களுக்குத் தேவை வரும்போதெல்லாம் தேவனை தேடாமல், 
தங்களுக்குள்ளே முறுமுறுத்து முறையிட்டார்கள்; 
மனமடிந்தவர்களோ மன்றாட மறந்தார்கள். 
ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் கண்ணெதிரே கண்டாலும், 
கர்த்தரைக் கண்டுகொள்ள தவறிவிட்டனர்.

'எகிப்திலிருந்து தம்மை வழிநடத்தியவர், வழி முழுக்கவும் நடத்திடுவார்' 
என்ற விசுவாசமின்மையே மக்களது விரோதத்துக்கு வித்திட்டு,
முறுமுறுப்புக்கு நீர்வார்த்தது. எனவே, ஆண்டவர் மேலுள்ள விசுவாசம் நம்மில்
 நாளும் விருத்தியாகிட விண்ணகத் தந்தையிடம் வேண்டுதல் செய்வோம்.


கண்டும் விசுவாசியாமல் இருப்போரைவிட, காணாமல் விசுவாசிப்போரே பேறுபெற்றோர்; இறையரசு அவர்களுடையது.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED