கர்த்தர்: நான் உங்களுக்கு வானத்திலிருந்து
அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்;
ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை
ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்;. .
யாத்திராகமம் 16:4
பசி பாரபட்சமில்லாதது. அதுபோல,பசியால் வருந்திய மக்களுக்கும்
பாரபட்சமில்லாமல் உணவு கொடுத்து ஆண்டவர் வழிநடத்தினார்.
பசியால் வாடியோருக்கு வானத்திலிருந்து ருசியான அப்பம் பொழிந்தார்,
அடுத்தநாள் கவலை மறக்க அனுதினமும் பொழியப்பண்ணினார்.
தமது பிள்ளைகளின் பசியறிந்து, பசியாற்றும் தாயாகிய ஆண்டவர்,
ஒவ்வொரு நாளும் திருமறை கொடுக்கும் அனுதின உணவை,
தமது மக்கள் திருப்தியாகவே உட்கொள்ள விரும்புகிறார்.
எனவே, அனுதினமும் இறைவார்த்தையிலும், இறைவழியிலும்,
இறைவாழ்விலும் தீராப்பசி கொள்வோம் - திருப்தியாக்கப்படுவோம்!
'ஆண்டவரே, அனுதின உணவை எங்களுக்கு இன்று அருளும்'
என கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete