மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்;
இது உமக்கு மிகவும் பாரமான காரியம்;
நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
யாத்திராகமம் 18:17-18
மக்களின் குறைதீர்க்கும் கூட்டத்தை தனி ஆளாய் நின்று நடத்தி,
நியாயம்விசாரித்து நன்மை செய்தார் மோசே.
இதைப்பார்த்த மோசேயின் மாமா,
மோசேக்கு திருத்தம் சேர்ந்த புத்திமதி சொன்னார்.
மோசேயும் அதற்கு செவிசாய்த்து தன்னையும் காரியத்தையும் சரிசெய்தார்.
பிறருக்கு நல்லதே செய்யும்போதும் நமக்கு பிழைகள் வரலாம்.
அத்தகு தவறுகளில் நம்மை திருத்தவும்,
ஆலோசனை சொல்லவும் ஆட்கள் அவசியம்.
ஆலோசனைகள் அனைத்தையும் பகுத்து, நல்ல ஆலோசனைகளை கேட்டு
நம்மை திருத்திக்கொள்வது நம்மை உன்னத உயரங்களுக்கு கூட்டிச்செல்லும்.
தவறுகளில் குற்றப்படுத்துதல் எந்த நன்மையையும் பயக்காது,
மாறாக, குறைகளை எடுத்துச்சொல்லி திருத்தம் செய்தால்
நன்மைகளுக்கு வழிபிறக்கும்.
P.C.: Google Images

Very truthful fact ஆமென்
ReplyDeleteBlessings Upon U Sir
DeleteAmen
ReplyDelete