உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை
சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால்,
அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா?
அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
யாத்திராகமம் 23:5
தம்மை தீட்டாய்ப்பார்க்கும் யூதனுக்கு 'நல்ல சமாரியன்'
இதைத்தான் செய்தார். பகைவர் என்றவுடன் பார்த்துவிட்டு பக்கவழியாய்
செல்லவில்லை, பகைமறந்து உதவினார் - உயிரையே காப்பாற்றினார்.
பகைமறந்து உதவியதாலே, இன்று பாரெங்கும் பகிரங்கமாய் கொண்டாடப்படுகிறார்.
'உதவும் உள்ளங்கள் உயர்ந்தது;
பகைவருக்கு உதவிடும் உள்ளங்களோ ஒப்பற்றது'.
உதவி தேவைப்படுவோர் பகைவராயினும்
பகைமறந்து உதவுதல் இரும்பு மனங்களையும் இளகச் செய்யும்;
இருவரும் இணைந்திட வழியும் செய்யும்.
எனவே, திருந்தி இணைத்திட வழியிருந்தால் வருந்தி உதவுவதும் தவறல்ல.
பகைவருக்கு உதவிடும்போது அவலம் நேரிடலாம். - ஆனால்,
நமது அன்பு, அவலத்தை மட்டுமல்ல அகிலத்தையும் ஜெயிக்கும்.

இவ்வாறு உதவுவது நன்று
ReplyDeleteஆமென்
ஆமென்.
Deleteஇறையாசீர் நம்மை தொடந்து நடத்தட்டும்.
Help us Lord
ReplyDeleteAmen