கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம்
இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள். . .
கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள்.
மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
யாத்திராகமம் 39:42-43
வனாந்திர வழிநடத்த மக்கள்
தங்களது வேலைகள் எல்லாவற்றிலும் செதுக்கினாலும் - ஒதுக்கினாலும்,
தங்களது வழிகாட்டி கற்பித்தபடியே கச்சிதமாக செய்திருந்தார்கள்.
கண்டவுடன் மனங்குளிர்ந்த வழிகாட்டி, மனதார ஆசீர்வதித்தார்.
நமது வேலைகள் நமது இஷ்டப்படி இருக்கிறதா அல்லது
இறைவழிப்படி இருக்கிறதா? நமது வேலைகளும் வினைகளும்,
நமக்கு வழிகாட்டி முன்சென்ற இயேசுகிறிஸ்து கற்பித்தபடி உள்ளதா?
நமது செய்வினைகளைப் பார்த்தல் அவரது உள்ளம்
ஆனந்தப்படுமா- ஆசீர் அருளுமா?
நாம் செய்த செயல்களே நம்மை நியாந்தீர்க்கும்.

Blessings Upon U
ReplyDelete