தீண்டும் தீட்டுகள்

உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு 
என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்
லேவியராகமம் 18:30

நமது உடலையோ உள்ளத்தையோ தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு
நாம் வாழ வழிகாட்டுவது ஆண்டவரது சட்டங்களும் கட்டளைகளும் தான்.
 அவரது கட்டளைகளை கைக்கொள்ளுதலே, 
நம்மை கட்டியெழுப்பவும் கறைபடாமல் காக்கவும் உதவும்.

நம்மை தீட்டுப்படுத்திட தீண்டுபவைகளை நம்மால் தடுக்கமுடியாது; 
ஆனால், தீட்டுப்படுத்திடாமல் காத்திடமுடியும். 
அதற்கு ஆண்டவரது துணையும், 
 கட்டளைகளை கைகொள்ளும் உறுதியும் நமக்கு துணைசெய்யும்.


நம்மை படைத்தவர் பரிசுத்தர்;
நம்மையும் பரிசுத்தமாய் வாழவே அழைக்கிறார்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED