முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
அவருடைய நீதியையும் தேடுங்கள்;
அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33
அடுத்தடுத்த தேவைகளையே நினைத்து நினைத்து
நமது அன்றாட தேடல்கள் நீளமாக இருந்தால்,
தேவன் என்றும் நமக்கு தூரமாக தான் இருப்பார்.
ஆண்டவரும், அவரது நீதியும் நமது தேடலில் முதன்மையானால்,
அனைத்து தேவைகளும் தீர்க்கப்படும்,
அளவினும் அதிகமாகவே நமக்கு கொடுக்கப்படும்.
புல்லையும், பூவையும் கவனித்து பராமரிக்கும் இறைவன்,
தமது சாயலாகவே படைத்த நம்மை பராமரிப்பில்லாமலா விட்டுவிடுவார்?
எனவே, நாம் இறைவனையும், இறையரசையும் தேடுவதையே முதன்மைப்படுத்துவோம்,
எல்லாவற்றிலும் அவரையே நாம் மையப்படுத்துவோம், மகிமைப்படுத்துவோம்.
இறைவனையே முதன்மையாக நாடுவோம்
இறையரசையே முழுமையாக தேடுவோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete