நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்.
லேவியராகமம் 26:4
வெவ்வேறுவித அனுபவங்களோடு நிறைந்த அனுதின வாழ்க்கைப்
பயணத்தின் படிக்கட்டுகள் நமது இமைகளுக்கு இமயமாய் தெரிகிறது.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் நமக்கு,
ஏற்றகாலத்திலே எல்லாம் சிறப்பாய் நடக்கும்
என்பதே ஆண்டவரின் அருள்வாக்கு.
நமது அன்றாட வாழ்வில் ஆண்டவரது கட்டளைகளின்படி நடந்து,
அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
நமக்கு ஏற்றகாலத்தில் அவர்தம் ஆசிமழையைப் பொழியபண்ணுவார் நம் ஆண்டவர். அல்லேலூயா!
ஆண்டவர் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்தும்படிக்கு
அவரது பலத்த கைக்குள் அடங்கியிருப்போம்.

Amen
ReplyDeleteBlessings Upon U
Delete