நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து,
உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி,
உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
லேவியராகமம் 26:9
நாம் சிறக்கவும், செழிக்கவும், பலுகிப்பெருகவும் விரும்பும் தேவன்தாமே,
சதாகாலமும் நம்மை கண்ணும்கருத்துமாய் பார்த்துப்பார்த்துப் பராமரித்து
நடத்துகிறார்; தாம் விரும்பியபடியே நமக்கு நிறைவாழ்வு அருள்செய்கிறார்.
நம்மோடு அவர்செய்த உடன்படிக்கையை திடப்படுத்திட,
அவர் நம்மைத் திரளாக்குகிறார்.
அதுபோல, நாமும் அவரோடு செய்த உடன்படிக்கையை திடப்படுத்திட,
நாம் அவரிடமே அருள்வேண்டுவோம் -
தூயஆவியானவரின் துணை வேண்டுவோம்.
ஆண்டவரது கண்கள் என்றும் நம்மேல் நோக்கமாயிருக்கும்;
நம்மை நிறைவாக்கவே ஆவலாயிருக்கும்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Aras Annan
ReplyDelete