முத்துகுளிக்க

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்
 தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச்
 சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28

நாம் நமது தாயின் கருவில் உருவாகும் முன்னமே, நம்மை முன்குறித்த தேவன்,
 தாம் முன்குறித்த அனைவரையும் அசுத்தத்திற்கு அல்ல,
 பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த வாழ்விற்காய் அழைக்கிறார்.
 அழைக்கப்பட்ட நம் அனைவரையும் நீதிமான்களாக்கி, மகிமைப்படுத்துகிறார்.

இத்தனை கிருபையும், தயவுமுள்ள அன்புநிறை அழைப்பை
 அசட்டைபண்ணமால், தேவனிடத்தில் அன்பு செலுத்தும் ஒவ்வொருவருக்கும்
 எந்த உபத்திரவங்கள் வந்தாலும்,
 எல்லாமும் நன்மையாகவே நடக்கிறது என்பது நிதர்சனம்.
 அன்பிலே வளர்ந்திட - நிலைத்திட தூய ஆவிவானவரே துணை செய்வாராக.

அழைப்பிலே உறுதியாய் நிற்க,
 ஆண்டவர் மேலுள்ள நமது அன்பை ஆழப்படுத்தி அதிகப்படுத்துவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED