நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன்
என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால்
நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3:12
ஆண்டவர் நம்மை அழைத்த அழைப்பில்,
அனுதினமும் முன்னோக்கி முன்னேறிட ஆசையும், ஆவலும்
நமக்கு இருக்க வேண்டும். இந்த தொடரோட்டத்தில் தேங்கி நிற்பதும்,
திரும்பி பார்ப்பதும் நமது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்;
பாதி கடந்து தோற்றாலும் பரிதாபமே பரிசாகும்.
நமக்கு நாமே பரீட்சை வைத்து, பதக்கம் கொடுத்து,
சாதனைகள் என்றெண்ணி சோதனைகளுக்குள் சிக்கிடாமல்,
"கிறிஸ்து இயேசுவினால் நாம் பிடிக்கப்பட்ட நோக்கமறிந்து,
தடைகளை தாண்டிடும் தடகள வீரனாய், நமக்கான இலக்கை நோக்கி
நாம் ஆசையும் ஆவலுமாய் தொடர்ந்து ஓடுவோம்".
ஆண்டவரின் அழைப்பே நமது இலக்காகட்டும்,
அதை ஆசையாய் தொடர்வதே நம் பணியாகட்டும்.

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen 🙏
ReplyDeleteAmen
ReplyDelete