கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால்,
நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
I பேதுரு 4:1
கிறிஸ்துவோடுள்ள நம் வாழ்வில், போரும்-போராட்டமும்
சிந்தனை மட்டங்களில் தான் துவங்குகிறது.
சிந்தையில் சிலம்பம்பண்ணும் துவக்கத்திலே நாம் தவறுவோமானால்,
அந்த எண்ணங்கள் மனங்களில் மையம் கொள்ளும்.
கேடான சிந்தைக்கு தீனிபோடுவதும், தீயிட்டு கொளுத்துவதும்
நமது கையில் தான்.
நமது இதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே நாமும் இருப்போம்.
எனவே, நம்முடைய எல்லா எண்ணங்களையும்
கிறிஸ்து இயேசுவுக்குள் கீழ்ப்படுத்தி, அவரது சிந்தையையே
நமக்கு ஆபரணமாகவும், ஆயுதமாகவும் வைத்துக்கொண்டால்
என்றும் நாம் விரும்பும் வெற்றியுள்ள வாழ்வு வாழலாம்.
நம்மைப்போலவே பாடுபட்டும் பாவமில்லாது வாழ்ந்த
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக்கடவது.
P.C.: Google Images

Yes True.
ReplyDeleteAmen .
God Bless
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Annan
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete