கர்த்தர்: என் கிருபை உனக்குப்போதும்;
பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.
II கொரிந்தியர் 12:9
நம் மனம் சோதனைகளை பார்த்தது சோர்ந்துவிடுகிறது,
இச்சைகளால் இம்சை அடைகிறது.
அலையைக் கண்டதும் நமது படகு தள்ளாடுகிறது.
நமது படகில் (பயணத்தில்) ஆண்டவர் இயேசு நம் உடனிருக்கும் போது,
ஆர்ப்பரிக்கும் அலையோ, அடித்துக்கொல்லும் சுனாமியோ
எது வந்தாலும் நமக்கு தோல்வி இல்லை.
நமக்கு நேரிடும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க
நமது சொந்த பெலன் போதுமானதல்ல! எனவே, பெலவீனமான நமக்கு,
தேவனாகிய கர்த்தர் தாமே தமது பெலன் தந்து தாங்குகிறார்,
தகுதியற்ற நம்மையும் தகுதிப்படுத்துகிறார். இத்தகு கர்த்தரிடமே
நம்மை முழுமையாக அர்பணிப்போம்-வெற்றிபெறுவோம்.
கர்த்தரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்ளுவோம்,
தேவ பெலனைக் கிருபையாய் பெற்றுக்கொள்வோம்.

Amen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete