தானியங்கி

இயேசு:நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். 
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், 
அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; 
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15:5

எந்தவொரு கொடியும் செடியல்லாமல் தனித்து இயங்கிடும் 
என்பது மூடத்தனம்; கொடியானது, படரவும்-வளரவும் செடியே மூலதனம். 
செடியின் துணையில்லாத கொடியால் தனித்து நிற்பதுபோல 
 பாசாங்கு செய்ய முடியும், பயன்தர முடியவே முடியாது.

நமது மெய்யான திராட்சை செடியாகிய இயேசு கிறிஸ்துவில் 
வளரும் கொடிளாய், நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருந்தால் 
மட்டுமே நம்மால் கனிதரும் வாழ்வு வாழ முடியும். 
நம்மால் விளையும் நற்கனிகள் அற்பமாய் சொற்பமாய் அல்ல;
மிகுதியாகவும் நிறைவாகவும் இருக்கும். 


செடியிலே வேர்கொள்வோம், சீரான கனிகொடுப்போம்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED