நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும்,
வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும்,
வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
எண்ணாகமம் 11:5
பாடித்துதித்த ஜனங்களை, பழைய வாழ்வைப்பற்றிய சிந்தனை
சீண்ட ஆரம்பித்தது; ருசியான சாப்பாட்டு மோகம் மோதல் செய்தது.
இஸ்ரவேலர்கள், தங்கள் பயணத்தின் நோக்கத்தை மறந்து,
வெந்ததையும் தின்றதையும் நினைத்துப் புலம்பி புழுங்குகிறார்கள்.
வெற்றிநடை போடுகிறோம் என்பதை மறந்து,
வெங்காயத்தையும் வெள்ளைபூண்டையும் நினைத்துக்கொண்டிருந்த
அந்த மக்களின் மனநினைவுகள், நமது நினைவுகளுக்குப்
பாடம்சொல்லிக்கொடுக்க பரிதவிக்கிறது.
இச்சைகளால் இழுக்கப்பட்டு சிக்கிக்கொள்ளாதபடிக்கு,
தேவையான இச்சையடக்கத்திற்காக தேவனிடம் வேண்டிடுவோம்.

நல்ல கருத்து
ReplyDeleteAmen🙏🙏
Blessings Upon U Vino
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteBlessings Upon U
ReplyDelete