உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்;
உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும்
அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
உபாகமம் 4:29
நமது வாழ்வும் வளமும்
நம்மைப் படைத்த தேவனாகிய கர்த்தரிடம் தான் உள்ளது,
அவரைத் தேடிடும் தேடலில் தான் நமது வாழ்வும் துளிர்க்கிறது.
இதில் ஆத்மார்த்தமான நமது தேடலே அவரைக் கண்டுகொள்ள உதவும்.
தேடிடும் நம்மேல் இரக்கமுள்ள தேவன்,
நமது குரலைக் கேட்டு நிச்சயமாக நமக்குப் பதில்கொடுப்பார்!
நமது தேடல்களின் தீர்வாம் தேவனை திருமறை வெளிச்சத்தில்
ஆராய்ந்து தேடிட ஆண்டவர் தாமே அருள்புரிவாராக!!
நல்ல மேய்ப்பன் குரலைக்கேட்போம், நாளும் பின்தொடர்வோம்.

Amen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteGod Bless
ReplyDelete