கர்த்தர் மோசேயை நோக்கி:
கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? . .என்றார்.
எண்ணாகமம் 11:23
இஸ்ரவேல் மக்கள் ஆறு லட்சம் பேரும் இறைச்சிக்காக அழுகிறார்கள்!
ஆண்டவரோ,
'உண்டு சலிக்கும்வரை ஒரு மாதம் முழுக்க இறைச்சி அருளுவேன்' என்கிறார்.
'ஆறுலட்சம் - ஆசைதீர - மாசம் முழுக்க?'
மோசேக்கும் இதில் ஐயம், அகிலமும் படைத்தவருக்கு இது சாதாரணம்.
நமது ஆண்டவரின் கை குறுகினதல்ல, அவர் வெறுமையிலும் அறுவடைசெய்கிறவர். சகலத்தையும் உண்டாக்கிய
"அவரே அனைத்தும், அவராலே அனைத்தும்" என்ற உணர்வு தான்,
கர்த்தர் மேலுள்ள நிச்சயத்தையும், நம்பிக்கையையும் நமக்கு ஆழப்படுத்தும்.
நம்முடைய தேவனாகிய கர்த்தரால்
செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Annan
DeleteBlessings Upon U
ReplyDelete