மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாய்ப் பேசி:
கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ,
எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.
கர்த்தர் அதைக் கேட்டார்.
எண்ணாகமம் 12:1,2
ஒரே குடும்பத்துக்குள் 'நீயா? நானா?' பிரிவினைக்கு துவக்கமாக,
மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள்.
அவர்கள் பேசியதை மோசே கண்டுகொள்ளவில்லை,
ஆனால், கர்த்தர் கடிந்துகொண்டார்;
தவறிழைத்தவர்களை உடனடியாக தண்டித்தார்.
கிறிஸ்துவின் கீழ் ஒரே சரீரமாகிய நமக்குள்ளும்
பிரிவும் பேதமையும் குறைவல்ல.
அவயவங்கள் தானாக தன்தன் இஷ்டப்படி செய்தாலோ,
தன்னைத்தான் உயர்த்திக்கொள்ள நினைத்தாலோ,
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டாலோ, 'கஷ்டம் சரீரத்திற்கு தான்'.
கிறிஸ்துவே முதன்மையாகவும் - மையமாகவும் இருந்தால்,
நாம் முட்டிக்கொள்ள வேலையே இல்லை.

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Annan
DeleteBlessings Upon U
ReplyDelete