அழிக்கும் ஆபத்து

நீ கானான் தேசத்தைப் பார்த்தபின்பு, 
உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, 
நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்; . . .
சீன் வனாந்தரத்தில் மேரிபாவின் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் 
அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய
 நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார்.
எண்ணாகமம் 27:14

இஸ்ரவேல் மக்களை விசுவாசத்திலே வழிநடத்திய மோசேயே
முக்கியமான ஓரிடத்தில் விசுவாசப் பயணத்தில் வழுக்கி விழுந்தார். 
கானான் தேசத்தைக் கண்ணாலே பார்த்தும் கால்மிதிக்க வழியின்றி
 வாரிக்கொண்டது விசுவாசக்குறைச்சல் தான்.

நமது அன்றாட நகர்விலும், ஆழ்கடல் பயணத்திலும் 
நம்மை காத்து நடத்துவது ஆண்டவர் மேலுள்ள விசுவாசம் மட்டுமே.
 இத்தகு விசுவாசம் நம்மில் வெறுமையாகிடாமல், 
வளர்ந்து விருத்தியாகிட ஆண்டவரிடம் அருள்வேண்டுவோம்.


நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும், 
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்!


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED