அவதூறு, ஆதாரமில்லாக் குற்றச்சாட்டு, சிறைச்சாலை, சித்திரவதை,
உளவியல் உபத்திரவம், உடலியல் உபாதைகள் இதையெல்லாம் சுமந்து
270 நாட்களுக்கு மேலாக போராடிய "சந்தனத்தென்றல்"
இன்று (05.07.2021) சுவாசிக்க மறுத்துவிட்டது.
ஜார்கண்ட் மலைப்பரப்பில் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும்
நிலமற்ற - பலமற்ற ஆதிவாசி மக்களுக்கு ஏற்பட்ட
அநியாயம், அக்கிரமம், அதர்மம், அத்துமீறல் . . .
இதையெல்லாம் எதிர்த்து கேள்விகேட்டு,
அநீதியை எதிர்த்து போராடிய போராளி
அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமி.!
ஆயுள் முழுக்க அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக போராடி,
சமூகநீதியையும் மனிதத்தையும் நிலைநாட்ட துடித்த
புனிதத்தின் மீது புழுதிவாரி தூற்றப்பட்டது.!
ஆமா,
ஆதிவாசிகளுக்காக போராடிய போராளி,
"தேச துரோகி" என பட்டம் சூட்டப்பட்டு பாடுபடுத்தப்பட்டார்!
குரலற்றோருக்காய் குரல்கொடுத்ததற்காக அதட்டப்பட்டார்!!
அதட்டலுக்கு அடிபணியாததால் அடைக்கப்பட்டார்!!!
அதிகாரம் எவ்வளவு வக்கிரமானது ?
போராளிக்கு சிறைவாசம் புதி(ர)தல்ல. . .
84 வயதான அருட்தந்தையோ,
அடிப்படை தேவைக்கும் மனுப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டு,
மனதளவில் காயப்பட்டார்.!
பொதுவாக போராளிகளுக்கான மரணம்
சுமூகமாக இருப்பதில்லை என்பது சரித்திரம்.!
ஆனால், அவர்களுக்கு மரணம் என்பது முடிவில்லை என்பதும் நிதர்சனம்.!!
போராளிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். . .
"ஸ்டேன் ஸ்வாமி" எனும் விதை வேராகி,
மரங்களாக - அசைக்கமுடியாத ஆலமரங்களாக
ஆங்காங்க கிளர்த்தெழும்பும்.!
கிழக்கின் கதிரவனை எப்படி எவராலும் தடுக்கமுடியாதோ,
அதுபோல இந்த கிளர்ச்சியையும்
எவனாலும்-எந்தக்கொம்பனாலும் தடுக்கமுடியாது.!
குரலற்றவர்களுக்காக குரல்கொடுத்து,
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி,
உமக்கான இறை அழைப்பில் உறுதிபட நின்று,
இறைவனின் திருவடி சேர்ந்த அருட்தந்தையே,
விழிநீர் கசிய உமக்கு வீரவணக்கங்கள். . . . !!!
😥😥
ReplyDeleteExcellent Tribute. We are slowly heading into an ideologically right wing India. Let us pray for a good break through against this sort of fascism.
ReplyDeleteGood one
ReplyDelete