அட, நடப்பா. . . !


சுழலும் பூமியும், சுவாசக் காற்றும்,
பாயும் நதியும், படர்ந்த மேகமும்,
உறங்கா எறும்பும், உயரத்தின் பருந்தும்,
ஓடும் மானும், ஓர்நாள் ஈசலும்,
குதிக்கும் அருவியும், கூட்டின் குளவியும்,
அன்றாட வாழ்க்கையை நன்றாக கற்பிக்கிறது!


P.C.: fb

நீண்ட காலம் ஒரே இடத்தில்
நின்று கொண்டிருப்பதால்
ஆக்கமும், ஊக்கமும் குன்றிப்போய்
தேக்கம் நம்மை தொற்றிக்கொண்டால்
காகம் மட்டுமல்ல காலமும்
தன் வேலையைக் காட்டும்!


படம் சொல்லும் பாடம் என்னவெனில்,
"இயங்குவது இன்றியமையாதது!"

இயங்குவதற்கு மனிதனுக்கு என்ன தயக்கம்?
"எதிர்மறை எண்ணங்களின் மயக்கம்;
ஏடாகூட ஏற்ற இறக்கங்களின் கலக்கம்".

உண்மை என்னவெனில்,
நேர்கோடு ஓவியமாவதில்லை
ஏற்ற இறக்கங்களே ஓவியத்தின் அழகு!

வாழ்க்கை எனும் அழகிய ஓவியத்தில்
நிலையாக நிற்பது தவறல்ல
சிலைபோல நிற்பதே தவறு!!

காலம் நம் கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளும்வரை காத்திராமல்
இன்முகத்தோடே இயங்கத்துவங்குவோம்!!!

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED