ஒரு புது யுகம். . .


இந்த ஒரு விடியலைத்தான்
உலகமே எதிர்நோக்கும்.
பறந்திடும் கார்களும்
வழிந்திடும் பார்களும்
இதன் வருகையை உறுதி செய்யும்.

கிழிக்கப்படும் காலண்டர்கள்
ஆட்டத்தின் முடிவில்
துடிக்க துடிக்க
தூக்கி எறியப்படும்.

கடைசி பொட்டலம், கடைசி புகை
கடைசி பாட்டில், கடைசி குவளை - என
அடுக்குவதில் அளபெடுக்கும் நாமும் -ஏதோ
விடிந்தவுடன் வேற்றுகிரகத்திற்கு போவதுபோல
தீர்மானங்களை தீவிரமாய் எடுப்போம்.

எதற்காக இத்தனை அதிரடி மற்றம்?

மலரும் இந்த புது வருடத்திற்குத்தான்
இத்தனை புதுமையும், புரட்சியும்!

P.C.: Google Images

புதிய விடியலின் ராகத்தில்
பூமி சுழலும் வேகத்தில்
மணிகளில், நாட்களில், மாதங்களில்
நமது முடிவுகளில் சில
முடிவுக்கே வந்துவிடும்.

தடபுடலாக துவங்கிய நாம்
தட்டுதடுமாறி தவறியே விடுகிறோம்.
கடலையும் தாண்டிட திட்டம் போட்ட நமக்கு
கால்வாயும் கஷ்டமாகவே தெரிகிறது.

P.C.: Google Images

கடினமான முடிவாய் தெரிவதால் - சுய
காட்டுப்பாடுகளையே கைவிடுகிறோம்.
இங்கு தான் தகராறே துவங்குகிறது!

முடங்குகிறோம், முடிக்கிறோம் என்பதற்காக
முடிவெடுப்பதையா தவிர்ப்பது?
இயலாமை தவறல்ல, முயலாமையே தவறு!

இயலாமை நீங்க இறைவனின் துணை வேண்டி
நல்வாழ்வு வாழ தினமும் முடிவெடுப்போம்,
ஜெபத்தோடு தொடர்ந்து முயற்சி செய்வோம்
இறைஅருளோடு நிதமும் பயிற்சி செய்வோம்
சிறகடிக்கும் சுடரொளியாய் முன்னேறுவோம்.

மலரும் புதிய ஆண்டு,
மகிழ்வாய்-நிறைவாய் அமைய
வேண்டுதல்களும் வாழ்த்துக்களும்.

P.C.: NDTV.COM

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED