அன்புடன் Fr. ஆல்பர்ட். . .



வாழ்க்கையை எளிதாக அணுகும் ஒருசிலரே
பிறரது பாலைவனப் பயணங்களில் பன்னீர் தெளித்து
பரிவு காட்டி தொடர்ந்து பயணிக்க தெம்பூட்டுவார்கள்
அருள்தந்தை ஆல்பர்ட் அந்த ஒருசிலருள் முதல்வர்.


கோடை வெயிலிலும் குளிர் தென்றல் வீசும் வார்த்தைகளால்
அவரது வரவேற்பறையில் இயல்பாக உரையாடினார்,
தன் அனுபவங்களால் வாழ்வின் அழகை அறிமுகப்படுத்தினார்
அது வெறும் வரவேற்பறை அல்ல, 
வாழ்வியல் நெறிபுகட்டும் வகுப்பறை !

'என் உடல் உழைப்பும், இறை அழைப்பும் - என்னை
கிறிஸ்துவுக்குள் பையித்தியமாக்கினால்,
புத்துணர்ச்சியும் - புன்சிரிப்புமாய் 
பள்ளத்தாக்குலயும் பயணிப்பேன்.

இன்னும் நம்ம சமுதாயம் முழுக்க  
இயேசுவை இரட்சகராக  அறியல - ஆனா
 நம்ம இங்க போட்டி போட்டுக்கிட்டு இருக்கோம். 
நெனைக்கவே சங்கடமாத்தான் இருக்கு. . . 

தம்பி, என் உள்ள உறுதி ஒன்னுதான், 
என் ஓட்டம் இரைக்கானது கெடையாது 
என்னைப் படைச்ச இறைவனுக்கானது!'

இப்படி இதயத்தைக் கூச்சலில்லாமல் கூறுபோடும்
இவரின் புரட்சி வார்த்தைகளில் தான் 
என்ன எளிமை, எத்தனை பேரழகு?? !!



அவரது அடுத்தடுத்த அலுவல்களின் அறைகூவலினால்
உத்தேசமாக ஒரு மணி நேரத்தில் உரையாடல் உறைந்தது.
அவர் 'நாளொரு மேனி'யும் பொழுதொரு வண்ணமுமாக பயணிக்க வாழ்த்தினேன்,
 என்னையும் கிறிஸ்துவுக்குள் பைத்தியக்காரனாய்ப் பார்க்கப் 'பயணப்பை' ஒன்றை இன்முகத்தோடு அன்பளித்தார்.




திரும்பிப்பயணிக்கும் முன் அருட்தந்தை. அமல்ராஜ் அவர்கள்
அற்புத பொழுதுகளை ஆவணப்படுத்திடும் புகைப்படமாக்கினார்.
அழகிய நினைவுகளை, Fr. ஆல்பர்ட் குழுமியில் அரவணைத்தார்.


Comments

  1. Amazing pa
    Convey my regards to Fr.Albert

    ReplyDelete
  2. பிரமாதம் ஐயா, தொடரட்டும் உங்கள் பயணம் இனிதாக👍👍👍👍👏👏👏👏👌👌👌

    ReplyDelete
  3. இனி பயணப்பை பார்க்கும்போதெல்லாம் நாம் கிறிஸ்துவுக்குள் பைத்தியங்கள் என நினைவூட்டும்.. குறுகிய வரிகளில் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு வணக்கங்கள்

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED