விண்ணவரின் சத்தம் கேட்டு விடியலாக புறப்பட்டாய்!
இருள் நிறைந்த இந்தியா இன்முகம் காட்டவில்லை;
கட்டிய மனைவி, கண்ணெதிரே பிள்ளை...
காலவன் அழைத்தாலும் கலங்கவில்லை;
கலப்பையில் கைவைத்த நீர் ....
கஷ்டங்களுக்காக பின் திரும்பவில்லை;
கேட்ட சத்தியத்தை கேட்பாரற்று கிடப்போருக்கெல்லாம் ...
சமயம் வாய்த்தாலும் வாய்கவிடினும் பகிர்ந்தளித்தாய்!
மேடைகளும் முகப்பு விளக்குகளுமே இருந்தால் தான்
நற்செய்தியை பறைசாற்றுவோம் என
முனங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு;
நடுத்தெருவில் நண்பகல் உணவு இடைவேளையிலும்
நற்செய்தியை பரிமாறலாம் என எடுத்துரைத்தாய்!
இந்தியாவின் முதல் நாளிதழாம்
சமாச்சார் டர்பன் ஐ சத்தமில்லாமல் வெளியிட்டாய்!
முழு திருமறையை ஆறு மொழிகளிலும்;
இருபது மொழிகளில் புதிய ஏற்பாடு நூல்களையும்
எமக்கு பரிசளித்தாய்;
காலணியில் கைவைத்து....
கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்து
சோதனைகள் குறுக்கிடினும்...
எத்தனை சாதனைகள்!
உடன்கட்டை எனும் சதியை அடித்து நொறுக்கும்
உருட்டு கட்டையாக உருவாக்கப்பட்டாய்!
உம் பிறந்த நாளில் (17-08-1761)
உம்மை பிறக்கவைத்தவரை போற்றுகிறோம்!🙏
சேட்டைகளுக்கெல்லாம் ஸ்டேடஸ்;
உப்பு சப்பற்ற விடயத்துக்கெல்லாம் போஸ்டர் அடித்து
ஓயா சுய புகழ் பரப்பும் இக்காலத்தில்;
ஒப்பற்ற பணிபுரிந்து - ஒன்றும் அறியாதவன் போல்
ஆண்டவரிடத்தில் அர்ப்பணிக்கும் உம் இறுதி வரிகள்
அவலமுற்ற ஏழையாய்... உதவியற்ற புழுவாய்;
கருணை மிக்க உம் கரங்களில் விழுகிறேன்! - வில்லியம் கேரி.
கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்து
சோதனைகள் குறுக்கிடினும்...
எத்தனை சாதனைகள்!
உடன்கட்டை எனும் சதியை அடித்து நொறுக்கும்
உருட்டு கட்டையாக உருவாக்கப்பட்டாய்!
உம் பிறந்த நாளில் (17-08-1761)
உம்மை பிறக்கவைத்தவரை போற்றுகிறோம்!🙏
சேட்டைகளுக்கெல்லாம் ஸ்டேடஸ்;
உப்பு சப்பற்ற விடயத்துக்கெல்லாம் போஸ்டர் அடித்து
ஓயா சுய புகழ் பரப்பும் இக்காலத்தில்;
ஒப்பற்ற பணிபுரிந்து - ஒன்றும் அறியாதவன் போல்
ஆண்டவரிடத்தில் அர்ப்பணிக்கும் உம் இறுதி வரிகள்
அவலமுற்ற ஏழையாய்... உதவியற்ற புழுவாய்;
கருணை மிக்க உம் கரங்களில் விழுகிறேன்! - வில்லியம் கேரி.
-இதயம் கசிந்த நன்றியுடன் - வீ!

வில்லியம் கேரி பிறந்தது இங்கிலாந்தில் - திரு
ReplyDeleteவிவிலியம் பன்மொழிகளில் இந்தியாவில்
வியர்வை சிந்தி பூட்ஸ்களை இங்கிலாந்தில் தைத்தார்
வியத்தகு வேலையை இயேசுவிற்காய் இந்தியாவில் செய்தார்
இத்தனையும் செய்துவிட்டு - தன்னையொரு
இழிவான புழுவாய் - எதுவும்
இல்லாத ஏழையாய்
இரக்கம் நிறைந்த
இறைவன் கையில் அர்பணித்து
இன்னுயிர் நீத்த
இறையடியாரை, கேரி பெருமகனாரை
இன்று நினைவுகூர்ந்து
இறைவா உம்மை போற்றுகின்றோம்
இவ்வாய்ப்பினை எமக்கு நல்கிய
இளையோரின் கேப்டன் "வீ" க்கு நன்றி நவில்கிறோம்
இயேசுவிற்கே புகழ்
இறைவனுக்கே மகிமை