ஒன்ஸ்மோர் ப்ளீஸ். . .

உதிரத்தை உந்தித் தள்ளவேண்டிய உன்
இதயம் உறக்கத்தைத் தேடுவதோ!
இல்லை இல்லை!!!

சிந்தித்து சிந்தித்து
சிதைந்து போனது போதும்!
விழித்தெழு....

விடியலுக்காக காத்திருக்க நேரமில்லை!

 P.C.: https://www.businesstoday.in/ - Nepal protests

இலங்கை-வங்கம்- நேபாளத்தை போல்
வன்முறை வெடிப்பதற்கு முன்...
துருப்பிடித்த முழங்கால்களில்
தூசியைத் தட்டி, தீ மூட்டுவோம்;
தீராத் தாகத்தோடு கொளுத்துவோம்...
ஊரைக் கொழுத்தி ஊளையிடும் தீயை அல்ல;
ஆத்துமாக்களை கொள்ளை கொள்ளும் எழுப்புதல் தீயை!

எருசலேம் வீதிகளில் ஓடிய இரத்த ஆறு,
இந்திய வீதிகளிலும்-வீடுகளிலும் பரவட்டும்!
"மீண்டுமொரு எழுப்புதலில்,"
சபைகள் சதம் அடிக்கட்டும்!
பாவக் கறைகள் மறையட்டும்;
பரிசுத்த தீ பரவட்டும்!

தீ-யின் மேலுள்ள இத்தீராத தாகம்
சாவுக்கல்ல சமாதானத்திற்கே!
மரண ஓலங்கள் மங்கல ஒலியாக மாறட்டும்!
அமைதியின் ஆண்டவர் அருள் பாலிப்பார்!!

இதயக் கதவைத் தட்டும்
உதய வேந்தர் நம் அருகே!
உடைந்து கிடக்கும் உள்ளங்களை,
அவர் உருப்படுத்தி உயிர்ப்பித்திட 
நீ உற்சாகமாய் உடனே கிளம்பிடு!!

இயேசு இந்தியாவுக்கே!
-வீ

Comments

  1. அருமையான பதிவு அண்ணா...புத்தெழுச்சியூடடும் பதிவு.

    ReplyDelete
  2. அன்பு ஆசிரியர் வீ அவர்களே, தங்கள் கவிதை வரிகளை படித்த பின்பு ஒன்ஸ் மோர் என்றே சொல்லத் தோன்றியது.

    இரத்தம் சிந்திய *இயேசுவை*
    இந்தியாவின் மூலை முடுக்கெங்கும்
    இலவசமாய் இன்முகத்துடன்
    இளையோர்கள் கொண்டு சேர்க்க - மேற்கண்ட

    இக்கவிதை வரிகள் - அதாவது தங்கள்
    இதய குமுறல்கள் - தங்கள்
    இறை வேண்டல்கள்
    இளையோரை அசைக்கட்டும்
    இந்தியா ஆசீர் பெற்று செழிக்கட்டும்
    இறையாசீர் உங்களில் பெருகட்டும்

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED