யோனா: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்;
அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்;
என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு
உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
யோனா 1:12
ஆண்டவர் போகச்சொன்ன இடத்திற்கு போகாமல்,
தன் மனம்போன போக்கில் தப்பியோட நினைத்த "யோனா"
வழிமாறி கப்பலில் பயணித்தான், கடலே கொந்தளித்தது.
"யோனா"வைத் தூக்கி கடலிலே போடும்வரை
கடல் கொடூரமாக கொந்தளித்தது, போட்டவுடன் அமர்ந்தது.
மனம்போன போக்கில் திரியும் "யோனா"க்கள் நமக்குள்ளும் இருக்கிறார்கள்;
அவர்களின் தேவையில்லாத காரியங்கள்,
நமக்குக் கொந்தளிப்பையும் கொண்டுவரும்.
வழிதப்பும் "யோனா"க்களைத் தூக்கிப்போடுவது தான் தீர்வு என்றால்,
யோசிக்காமல் தூக்கிவீசுவது தான் சிக்கல்களைத் தீர்க்கும்.
P.C.: Google Images
யோனா வின் முழுக்கதையை சுருக்கமாகப் படிக்க . .

Amen
ReplyDeleteAmen....
ReplyDeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
Delete